பள்ளியில் மாணவர்களுக்கு கட்டாயத் தொழுகை... குஜராத் அரசு விசாரணை!


பள்ளியில் தொழுகை

குஜராத்தில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு கட்டாயத் தொழுகை நடத்திய விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் வெவ்வேறு மதங்களின் நடைமுறைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகக் கூறி சமீபத்தில் மாணவர்களைக் கட்டாயமாக தொழுகை நடத்த வைத்துள்ளனர்.

அந்தப் பள்ளி கட்லோடியா என்ற இடத்தில் அமைந்துள்ளது. கட்லோடியா தொகுதி குஜராத் முதல்வர் பூபேந்திர படேலின் சொந்த தொகுதியாகும்.

தனியார் பள்ளியில் மாணவர்களைப் பள்ளி நிர்வாகம் தொழுகை நடத்த வைத்ததைத் தொடர்ந்து அந்தப் பள்ளிக்கு எதிராக இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. அத்துடன் ஆசிரியர் ஒருவரை சிலர் அடிப்பது போன்ற காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலானது. இந்நிலையில், பள்ளி நிர்வாகம் மன்னிப்பு கோரியுள்ளது.

மேலும், மாணவர்களைத் தொழுகை நடத்த கட்டாயப்படுத்தவில்லை என்று பள்ளி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த குஜராத் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

சிங்கிள் டீ குடிக்கிறதுல இவ்வளவு ஆபத்தா... உயிரை விலை பேசும் ஆய்வு முடிவுகள்!

அவர் என்ன மாமனா... மச்சானா... பிக் பாஸ் வீட்டில் தொடங்கிய முதல் சண்டை

x