சனிக்கிழமை `நோ லீவ்’ - பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!


தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை

மிக்ஜாம் புயலால் மற்றும் வெள்ளம் பாதிப்பு காரணமாக அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

சென்னை மழை வெள்ளம்

வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் சென்னையின் பல்வேறு இடங்களிலும் மழை நீர் தேங்கி பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகினர். சென்னை எர்ணாவூர், வேளச்சேரி, திருவொற்றியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கழுத்தளவிற்கு மழை நீர் தேங்கியது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்தனர்.

தாழ்வான பகுதிகள் மற்றும் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வசித்து வந்த மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். பெரும்பாலான முகாம்கள் பள்ளிகளில் அமைக்கப்பட்டிருந்தன. புயல் மற்றும் வெள்ளம் காரணமாக ஒரு வார காலம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

பள்ளிகள் இயங்கும்

வெள்ளப்பாதிப்புகள் சீரானதை அடுத்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் மிக்ஜாம் புயலால் அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடு செய்யும் வகையில், இனி வரும் 4 சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் இயங்கும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 6 மற்றும் 20, பிப்ரவரி 3 மற்றும் 17ம் தேதிகளில் அனைத்துவகை பள்ளிகளும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் விடுப்பட்ட பாடங்களை ஆசிரியர்கள் நடத்திகொள்ளலாம் என்றும் அன்றைய தினம் மாணவர்கள் வருகை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

x