தொடர் மழையால் உதிர்ந்து கொட்டும் பருத்திக் காய்கள் @ திருவாரூர்


திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில், கடந்த ஐந்து நாட்களாக பரவலாக பெய்து வருவதால், பருத்தி வயல்களில் தண்ணீர் தேங்கி வருகிறது. இதன் காரணமாக, பருத்தி காய்கள் உதிர்ந்து வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், நன்னிலம், குடவாசல், திருத்துறைப்பூண்டி, வலங்கைமான், மன்னார்குடி, முத்துப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 40 ஆயிரம் ஏக்கரில் பருத்தி பயிரிடப்பட்டுள்ளது. மாசி பட்டத்தில் முதல் வாரத்தில் பருத்தி சாகுபடி தொடங்கியது. பருத்தி சாகுபடிக்கு விதை விதைப்பது முதல், காய்ப்புக்கு வருவது வரை, ஏக்கர் ஒன்றுக்கு 40 ஆயிரம் ரூபாய் செலவாகும் என்கிறார்கள் விவசாயிகள்.

தற்சமயம் பருத்தி பயிரானது கடந்த மாசி மாதத்தின் முதல் வாரத்தில் விதைப்பு செய்து 70 முதல் 75 நாள் பயிராக வளர்ந்துள்ளது. இந்த நிலையில், காய்ப்புக்கு வந்த பருத்தி பயிர்களில், தொடர் மழையின் காரணமாக அதிக அளவு குளிர்ச்சி நிலவுவதால், பருத்தி காய்கள் அனைத்தும் உதிர்ந்து கொட்டுகின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

x