நாடு முழுவதும் அதிர்ச்சி... அரசு மருத்துவமனையில் 12 குழந்தைகள் உட்பட 24 பேர் ஒரே நாளில் உயிரிழப்பு!


மகாராஷ்டிரா அரசு மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் 24 பேர் பலி

மகாராஷ்டிராவில் அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 12 பச்சிளம் குழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவில் மரத்வாடா பகுதியில் அரசு டாக்டர் சங்கர் ராவ் ஜவான் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் முக்கிய மருத்துவமனையாக திகழ்ந்து வரும் இந்த மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக பிறந்த பச்சிளம் குழந்தைகள் 12 பேர் உட்பட 24 நோயாளிகள் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நான்டேட் நகரின் முக்கிய அரசு மருத்துவமனையான இந்த மருத்துவமனையில், இவ்வளவு மோசமான சம்பவம் நடைபெற்று உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மூத்த காங்கிரஸ் தலைவர் அசோக் சவான், பல்வேறு காரணங்களால் 24 பேர் உயிரிழந்துள்ளது நிச்சயம் விசாரிக்கப்பட வேண்டிய ஒன்று எனவும் மேலும் பலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக வரும் தகவல்கள் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். மேலும் மருத்துவமனையில் மருந்துகள் தட்டுப்பாடு நிலவியதாக வெளியாகும் செய்தி குறித்தும் விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்

மகாராஷ்டிரா அரசு மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் 24 பேர் பலி

ஒரே நாளில் இவ்வளவு மரணங்கள் நேர்ந்திருப்பது நிச்சயம் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத நிகழ்வு அல்ல என்ற தெரிவித்துள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சுப்ரியா சுலே, முதலமைச்சரும், மாநில நிர்வாகமும் உரிய விசாரணை நடத்தி பிரச்சினையின் தீவிரம் குறித்து விளக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் நான்டேட் பகுதியில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் மருத்துவமனையில் 18 பேர் 24 மணி நேரத்தில் உயிரிழந்திருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது மீண்டும் அதே போன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

x