மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்: ஆகஸ்ட் 13-ம் தேதி கூடுகிறது


தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆக.13-ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

உலக முதலீட்டாளர் மாநாட்டின் தொடர்ச்சியாக, முதலீடுகளை ஈர்க்கும் வகையில் ஆக. 27-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா செல்ல உள்ளார். இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் வருகிற 13-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த அமைச்சரவை கூட்டத்தில், முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும், முதலமைச்சர் வெளிநாடு செல்லும்போது அமைச்சரவையின் ஒப்புதல் பெற வேண்டியது வழக்கமான நடைமுறையாக உள்ளது. அதன்படி, முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கவுள்ளது.

x