'புதிய நாடாளுமன்றம் இந்தியாவிற்கே பெருமை': ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம்!


தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

புனித செங்கோலை நாடாளுமன்றத்தில் அதற்குரிய இடத்தில் வைப்பது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்க்கும், இதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு தேசம் என்றும் நன்றியுடன் இருக்கும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் புதிய நாடாளுமன்றம் திறப்பு விழா வெகு விமர்சையாக நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் அதற்குப் பலரும் தங்களது பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘’நமது தேசத்தின் ஒளிமயமான கடந்த காலத்தையும், எழுச்சிமிக்க நிகழ் காலத்தையும், பிரகாசமான எதிர் காலத்தையும், பிரதி பலிக்கும் நமது புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் வரலாற்று சிறப்புமிக்க திறப்பு விழாவில் உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு இந்தியருக்கும் அன்பான நல்வாழ்த்துக்கள்.

புனித செங்கோலை அதிகாரமாற்ற கலாச்சாரம் மற்றும் சுதந்திரத்தின் அடையாளமாகவும், நியாயமான ஆளுகையை தொடர்ந்து நினைவூட்டவும், நாடாளுமன்றத்தில் அதற்குரிய இடத்தில் வைப்பது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்க்கும். இதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு தேசம் என்றும் நன்றியுடன் இருக்கும் ‘’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

x