ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டத்தில் சாதி அடையாளங்களுக்குத் தடை - உயர் நீதிமன்ற கிளை உத்தரவு


விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடி உற்சவ திருவிழா மற்றும் தேரோட்டத்தில் சாதி ரீதியான அடையாளங்கள் இடம்பெறாமல் இருப்பதை உறுதி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இத்தலம் ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், பெரியாழ்வார் ஆகிய இரு ஆழ்வார்கள் அவதரித்த சிறப்புக்குரியது. இங்கு ஆண்டாளின் அவதார தினமான ஆடி மாத பூரம் நட்சத்திரத்தில் நடைபெறும் ஆடிப்பூர தேரோட்ட திருவிழா பிரசித்தி பெற்றதாகும். ஆண்டாள் கோயில் தேரோட்டம் நாளை ஆக. 7ம் தேதி கோலாகலமாக நடைபெறும்.

இந்த நிலையில், சந்தனகுமார் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி அமர்வு பிறப்பித்த உத்தரவில், ‘ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடி உற்சவ திருவிழாவில் சாதி தலைவர்கள் உருவப்படம் பொறிக்கப்பட்ட டீசர்ட், ரிப்பன், கொடி இடம்பெறாமல் இருப்பதை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜாதி அடையாளம் ஏதுமின்றி ஒற்றுமையாக இணைந்து திருவிழாவை நடத்த வேண்டும். இ

அமைதிப் பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில், ஒற்றுமையாக இணைந்து திருவிழாவை நடத்த வேண்டும். சாதியை குறிக்கும் விதத்தில் தலையில் ரிப்பன் கட்டிச் செல்லக் கூடாது. தேரோட்டத்தை அமைதியான முறையில் நடத்துவதை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் உறுதி செய்யவேண்டும்’ என உத்தரவிட்டுள்ளது.

x