2,310 ஐடிஐ மாணவர்களுக்கு பணி ஆணை: அமைச்சர் சி.வி.கணேசன் வழங்கினார்


சென்னை: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பொருளாதார மற்றும் தொழில் வளர்ச்சியை ஊக்கப்படுத்தவும், இளைஞர்களின் வேலைவாய்ப்பு திறனை மேம்படுத்தவும் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.

தொழில் வளர்ச்சிக்கு தேவையான திறன்மிக்க மனிதவளத்தை தொழிற்சாலைகளுக்கு வழங்குவதில் தொழிற்பயிற்சி நிலையங்கள் (ஐடிஐ) முக்கிய பங்கு வகிக்கின்றன.

கடந்தாண்டு 71 அரசு ஐடிஐ-கள் தொழில் 4.0 தரத்திலான தொழில்நுட்ப மையங்களாக மேம்படுத்தப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டன.

அத்தொழில்நுட்ப மையங்களில் ஓராண்டு பயிற்சி இண்டஸ்ட்ரியல் ரோபாட்டிக்ஸ் மற்றும் மேனுபாக்சரிங் பிராசஸ் கண்ட்ரோல் அண்ட் ஆட்டொமேஷன் ஆகிய பிரிவுகளில் முதல் அணியில் பயிற்சி நிறைவு செய்த 84.12 சதவீதம் பயிற்சியாளர்கள் முன்னணி நிறுவனங்களில் பணி நியமனம் பெற்றுள்ளனர்.

x