வணிக சிலிண்டர் விலை அதிரடியாக உயர்வு!


சென்னை:வீட்டு உபயோகத்திற்கான சமையல் சிலிண்டர் விலையில் மாற்றமில்லை. வணிக சிலிண்டரின் விலையை ரூ.7.50 உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

பெட்ரோல், டீசல் விலையை சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப நிர்ணயித்துக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி ஒவ்வொரு மாதமும் வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் வணிக சிலிண்டர் விலையானது மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் பிரதி மாதம் 1-ம் தேதி வணிக மற்றும் வீட்டு பயன்பாட்டிற்கான கியாஸ் சிலிண்டர் விலையும் மாற்றி அமைக்கப்படுகிறது.

அதன்படி ஆகஸ்ட் 1-ம் தேதியான இன்று வணிக சிலிண்டரின் விலை, 7.50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது இதன் மூலம், 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் தற்போது ஆயிரத்து 817 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று வரை இந்த வணிக சிலிண்டர் 1809.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. 4 மாதங்களுக்குப் பிறகு வணிக சிலிண்டரின் விலையை உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதேநேரம், வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை மாற்றமின்றி, 818.50 ரூபாயாகா தொடர்கிறது.

x