விசிக தலைவர் திருமாவளவனுக்கு பிடிவாரன்ட்


மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் மதமாற்ற தடைச் சட்டத்துக்கு எதிராக 2003-ல் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமையில் பேரணி, பொதுக்கூட்டம் நடத்த காவல் துறையில்அனுமதி பெறப்பட்டது. ஆனால், அனுமதி பெறாத சாலை வழியாக பேரணி செல்ல முற்பட்டனர்.

அப்போது, காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால், விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும், காவல் துறையினருக்கும் இடையே மோதல்உருவானது. இது தொடர்பாக அப்போதைய மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் மோகனவேல் அளித்த புகாரின் பேரில், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் திருமாவளவன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மயிலாடுதுறை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தஇந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் விசிக தலைவர் திருமாவளவன் ஆஜராகாததால், அவருக்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பித்து, வழக்கைஆகஸ்ட் 27-ம் தேதிக்கு தள்ளிவைத்து மாவட்டஅமர்வு நீதிபதி ஆர்.விஜயகுமாரி உத்தரவிட்டார்

x