குடந்தையில் நேற்று ரயில் மறியல் செய்த காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி சமூக வலைதளங்களில் கேலிப்பொருளாக மாறியிருக்கிறார்.
2019 நாடாளுமன்றத் தேர்தலின் போது பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாக கருத்து சொல்லியதாக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி மீது சூரத் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து, நேற்று அதில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. தீர்ப்பில் ராகுல் காந்திக்கு இரண்டு வருட சிறைத் தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டது.
இதனை கண்டித்து இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி குடந்தையில் நேற்று ரயில் மறியலில் ஈடுபட்டார். அவருடன் மொத்தமே நான்கு பேர் மட்டுமே கலந்து கொண்ட நிலையில் அவரை போலீஸார் கைது செய்தனர். இந்தநிலையில் அவர் ரயில் மறியல் செய்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது
ஆனால் இதையே நெட்டிசன்கள் கேலிப் பொருளாக மாற்றி விட்டார்கள். நான்கு பேருடன் அவர் ரயில் மறியல் செய்தது கிண்டலுக்கு ஆளாகியுள்ளது. இது குறித்த ஒரு கேலிச்சித்திரம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. ஒரு ஏட்டையாவின் மிதிவண்டியில் முன்னாள் அழகிரி அமர்ந்திருக்கிறார். இரண்டு பேருக்கெல்லாம் ஜீப் அனுப்ப முடியாது என்று சொல்லிவிட்டார்கள் என்று அந்த கார்ட்டூன் பேசுகிறது. இந்த கேலிச்சித்திரம் சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்படுவதால் அது வைரல் ஆகி வருகிறது.