ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்கள் கிளர்ந்து எழுந்தால் பாஜக அவ்வளவு தான்: டென்ஷனான ஜெயக்குமார்


அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

பாஜகவினரை அந்தக் கட்சியின் தலைவர் கட்டுப்படுத்த வேண்டும். ஒன்றுரை கோடி தொண்டர்கள் கொண்ட அதிமுகவினர் கிளர்ந்து எழுந்தால், அவர்களால் தாங்க முடியாது’ என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மகளிர் தினக் கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் கலந்துக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறுகையில், ‘’ ஓபிஎஸ் அணியில் இருக்கும் எனது அருமை நண்பர் வைத்திலிங்கம் சேராத இடத்தில் சேர்ந்து, என்னைப்பற்றி தவறாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் அங்கு இருப்பதை விட இங்கு வந்துவிடுவது அவருக்கு நல்லது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் அம்மாவுடன் யாரையும் ஒப்பிட முடியாது. தமிழர்கள் போற்றும் வீரமங்கையாக திகழ்ந்தவர் அவரை ஒப்பிடுவதற்கு இந்தியாவிலேயே யாருக்கும் தகுதியில்லை. கூட்டணி கட்சிகளிடையே கருத்து மோதல்கள் இருக்கத்தான். செய்யும் அதனைக் கட்டுப்படுத்த வேண்டியது அக்கட்சியின் தலைவருடைய கையில் தான் உள்ளது. ஆனால், தலைவர்களே உணர்ச்சிகளை தூண்டும் வகையில் பேசக் கூடாது.

பாஜகவினரை அந்த கட்சியின் தலைவர் கட்டுப்படுத்த வேண்டும். ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்ட அதிமுகவினர் கிளர்ந்து எழுந்தால், அவர்களால் தாங்க முடியாது. 2024 நாடாளுமன்றத் தேர்தல் வரை அதிமுக - பாஜக கூட்டணி தொடரும். அதில் எந்த மாற்றமும் இல்லை’’ என்றார்.

x