சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் கைதான ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவலை வரும் ஆக.12 வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் தேசிய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாரால் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவரை அமலாக்கத் துறையும் கடந்த ஜூன் 26 அன்று சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்தது. இந்த வழக்கில் ஜாபர்சாதிக்கை அமலாக்கத் துறை அதிகாரிகள் தங்களது காவலில் எடுத்து விசாரித்தனர்.
அதன்பிறகு புழல் சிறையில் அடைக்கப்பட்ட ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்ததால், அவர் காணொலி காட்சி வாயிலாக நேற்று சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார். அதையடுத்து ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவலை வரும் ஆக.12 வரை நீட்டித்து முதன்மை நீதிபதி எஸ். அல்லி உத்தரவிட்டுள்ளார்