‘பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகள் என்று ஒரு வார்த்தைகூட இல்லை’ - ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம்


ராமேஸ்வரம்: மத்திய அரசின் பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு திட்டங்களை அறிவிக்காததைக் கண்டித்து ராமேஸ்வரம் தபால் நிலையம் முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசின் பட்ஜெட்டில் மாற்றுத் திறனாளிகளுக்கான துறைக்கு மிகவும் குறைவாக நிதி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இது மாற்றுத்திறனாளிகளை புறந்தள்ளும் வகையில் அமைந்துள்ளது என்றும் மாற்றுத் திறனாளிகள் தரப்பில் அதிருப்தி குரல் எழுந்துள்ளது.

இந்நிலையில், மத்திய பட்ஜெட்டில் மாற்றுத் திறனாளிகளின் நலன்களுக்கு போதிய நிதி ஒதுக்காததை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதனையொட்டி ராமேசுவரம் தபால் நிலையம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் தாலுகா செயலாளர் எஸ். சீனிவாசன் தலைமை வகித்தார்.

மத்திய பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகள் என்று ஒரு வார்த்தைகூட இல்லை. மாற்றுத்திறனாளிகளுக்கு என்று ஒரு திட்டத்தையும் அறிவிக்கவில்லை என குற்றம்தாட்டி, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொணடவர்கள் கண்டன முழுக்கங்களை எழுப்பினர்.

x