86 மரக்கன்றுகளை நட்டு 86-வது பிறந்தநாளை கொண்டாடினார் ராமதாஸ்: கட்சித் தலைவர்கள் வாழ்த்து


விழுப்புரம்: திண்டிவனம் அருகே கோனேரிகுப்பத்தில் உள்ள சரஸ்வதி கல்விக்குழும வளாகத்தில், பாமக நிறுவனர் ராமதாஸின் 86-வது பிறந்தநாளையொட்டி நிறுவனர் நாள் விழா, மரக்கன்று நடும் விழா, பாவரங்கம் என முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது.

கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் தொடக்கமாக, வன்னியர் சங்கத்தலைவர் மறைந்தகுரு சிலை அருகே 86 மரக்கன்றுகளை ராமதாஸ் நட்டு வைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது “அறத்தில் சிறந்தது மரம் நடுவது. அந்த வகையில் இந்நாளில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. வருங்காலங்களில் இங்கு5 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படும்.பசுமையான சூழல் நிலவ வேண்டும். விரைவில் இக்கல்வி நிலையம், நிகர்நிலை பல்கலைக்கழகமாக மாற்றப்படும்” என்றார்

இவ்விழாவில் ராமதாஸின் துணைவியார் சரஸ்வதி ராமதாஸ், வன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழி, ராமதாஸின் மகள்காந்தி பரசுராமன், சரஸ்வதி கல்விக் குழுமத்தின் கல்லூரி முதல்வர்கள் வீரமுத்து, அசோக்குமார், ஜெயபிரகாஷ், பரமகுரு, சமூகமுன்னேற்ற சங்கத்தலைவர் சிவபிரகாசம், சிவகுமார் எம்எல்ஏ, பாமக மாவட்ட செயலாளர் ஜெயராஜ், கவிஞர்கள் ஜெயபாஸ்கரன், பச்சியப்பன், இயற்கை, செஞ்சி தமிழினியன், விநாயகமூர்த்தி, எழுத்தாளர் கண்மணி குணசேகரன்உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தலைவர்கள் வாழ்த்து

முதல்வர் மு.க.ஸ்டாலின்: பாமக நிறுவனர் ராமதாஸின் பிறந்தநாளில், அவர் நீண்டகாலம் நல்லஉடல் நலத்துடன் வாழ வாழ்த்துகிறேன்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: தேக ஆரோக்கியத்துடன் பல்லாண்டு வாழ்ந்து, தமிழகத்துக்கும், தமிழக மக்களுக்கும் தொடர்ந்து சேவைபுரிய வாழ்த்து கிறேன்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: தமிழக மக்களின்மேம்பாட்டுக்காக 40 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்து வரும் பாமக நிறுவனர் ராமதாஸுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

இவ்வாறு அவர்கள் கூறியுள் ளனர்.

மேலும், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், நாம் தமிழர்கட்சி தலைமை ஒருங்கிணைப் பாளர் சீமான், த.வெ.க. தலைவர் நடிகர் விஜய், பாமக தலைவர் அன்புமணி, காங்கிரஸ் முன்னாள் எம்.பி. சு.திருநாவுக்கரசர் உள்ளிட்டோரும் ராமதாஸுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்

x