ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ஈவிகேஎஸ்.இளங்கோவனின் 2வது மகன் போட்டி?


சஞ்சய் சம்பத்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ். இளங்கோவனின் 2-வது மகன் சஞ்சய் சம்பத் அறிவிக்கப்படுவார் என்று என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியின் சார்பில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் திருமகன் ஈவெரா. இவர் முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ஈவிகேஎஸ்.இளங்கோவின் மகனாவார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரசுக்கே மீண்டும் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் ஈவிகேஎஸ். இளங்கோவனை நிறுத்த காங்கிரஸ் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் முயற்சி செய்தனர். ஆனால், அவர் அதை ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.

எனவே, அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர் போட்டியிட்டால் எளிதில் வெற்றிபெறலாம் என்பதால் அவரது 2-வது மகன் சஞ்சய் சம்பத்தை வேட்பாளராக்க களமிறக்க காங்கிரஸ் தலைமை திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக இளங்கோவனிடம் காங்கிரஸ் தலைமை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

மக்கள் ஜி.ராஜன்.

இத்தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் மக்கள் ஜி.ராஜனும் ஆர்வமுடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் யார் வேட்பாளர் என்பது விரைவில் தெரிந்து விடும் என்று காங்கிரஸ் கட்சியினர் கூறியுள்ளனர்.

x