கவுரவ விரிவுரையாளர்களுக்கு ரூ.50 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்


சென்னை: பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரையை ஏற்று கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாதம் ரூ.50 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும், அரசுக்கல்லூரிகளில் 7,300-க்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில், தொகுப்பு ஊதியம் வழங்கப்படுகிறது.

இந்த கவுரவ விரிவுரையாளர் கள் அனைவருமே பல்கலைக்கழகமானியக் குழு பரிந்துரைக்கும் கல்லூரி உதவிப் பேராசிரியருக்கான கல்வித் தகுதியைப் பெற்றவர்கள். அதிலும் பலர், சிறப்புத் தேர்வு எழுதி பணி வாய்ப்பைப் பெற்றவர்கள்.

நிரந்தரப் பணியில் இருப்பவர்களின் ஊதியம் ரூ.80,000 ஆக இருக்கும்போது, முறையான தகுதியின் அடிப்படையில் தேர்வான கவுரவ விரிவுரையாளர் களுக்கான தொகுப்பு ஊதியம் ரூ.20,000 முதல் ரூ.25,000மட்டுமே வழங்கப்பட்டு வரு கிறது.

தமிழகத்தில், பெரும்பாலான கல்லூரிகள் கவுரவ விரிவுரையாளர்களைக் கொண்டே செயல்படுகின்றன. பல கல்லூரிகளில்,கற்பித்தல் பணியோடு கல்லூரியில் இருக்கும் அனைத்து பணிகளையும் மேற்கொள்பவர்கள் இவர்கள்தான். ஆனால், இவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மிகச் சொற்பம்.

எனவே, பல்கலை. மானியக்குழு, கவுரவ விரிவுரையாளர் களுக்கு, மாதம் ரூ.50,000 ஊதியம் வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளதை, திமுக அரசுஉடனடியாக நடைமுறைப் படுத்த வேண்டும். காலதாமதம் இல்லாமல் ஊதியத்தை வழங்க வேண்டும்.

கடந்த 2020-ம் ஆண்டு தமிழகஅரசு வெளியிட்ட அரசாணைஎண் 56-ன்படி, புதிய விரிவுரை யாளர்கள் பணி நியமனத்தில், 5 ஆண்டுகளுக்கு மேல் கவுரவ விரிவுரையாளர்களாகப் பணிபுரியும் தகுதி வாய்ந்தவர் களை நியமிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

x