`மக்களுக்கு எதையுமே செய்து தர முடியவில்லை'- புதுச்சேரி முதல்வரை புலம்ப வைத்தவர்கள் யார்?


முதல்வரை சந்தித்த போராட்ட குழுவினர்

``மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால் மக்களுக்கு எதுவுமே செய்து தர முடியவில்லை. தினமும் மன உளைச்சலாக இருக்கிறது'' என்று புலம்பியிருக்கிறார் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி.

புதுச்சேரி திமுக பிரமுகர். எஸ் பி சிவக்குமார் இல்ல திருமண விழாவை நடத்தி வைத்த தமிழக முதல்வர் ஸ்டாலின் புதுச்சேரி அரசியல் கடுமையாக விமர்சித்திருந்தார். புதுச்சேரியில் பொம்மை ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆளுநர் ஆட்டி படைக்கும் வகையில் புதுச்சேரியில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. தற்போது நடக்கும் ஆட்சி மக்களுக்காக நடைபெறவில்லை. புதுச்சேரியில் மக்களுக்கு எந்த நன்மையையும் கிடைக்கவில்லை என ஸ்டாலின் விமர்சனம் செய்தார்.

அது உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில் தற்போதைய முதல்வர் ரங்கசாமி அண்மைக்காலமாக சில கருத்துக்களை கூறி வருகிறார். சில தினங்களுக்கு ஒரு இந்த நிலையில் நேற்று தன்னை சந்திக்க வந்தவர்களிடம் மக்களுக்கு எதையும் செய்ய முடியாததால் மன உளைச்சலாக இருப்பதாக அவர் புலம்பி இருக்கிறார்.

மேலும், மத்திய அரசிடம் இருந்து ஒவ்வொரு திட்டத்திற்கும் அனுமதி வாங்க வேண்டிய சூழல் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் நேற்று தன்னை சந்திக்க வந்தவர்களிடம் மக்களுக்கு எதையும் செய்ய முடியாததால் மன உளைச்சலாக இருப்பதாக அவர் புலம்பி இருக்கிறார்.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்று அம்மாநில மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதற்காக போராட்டக் குழு அமைத்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகின்றனர். நேற்று அந்த குழுவினர் உருளையன்பேட்டை தொகுதி சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் நேரு தலைமையில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்று தர வேண்டும் என்று வலியுறுத்தினர். இதற்காக சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றி மத்திய அரசுக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அப்போது அவர்களிடம் பேசிய ரங்கசாமி மனம் விட்டு தன்னுடைய நிலையைச் சொல்லி புலம்பினார்.

"மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தங்களால் மக்களுக்கு எதுவுமே செய்து கொடுக்க முடியவில்லை என்று வேதனையாக உள்ளது. மத்திய அரசு முழு ஒத்துழைப்பைத் தருவதில்லை. மக்களுக்கு அரசு கொண்டு வரும் திட்டங்கள் முடக்கப்படுகிறது. புதுச்சேரிக்கு உண்மையான விடுதலை இன்னும் கிடைக்கவில்லை.

'புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து இல்லாததால் நிர்வாகம் ஆள்வதில் சிரமம் உள்ளது என்பது ஆள்பவர்களுக்கு மட்டுமே தெரியும். ஏதோ ரங்கசாமிக்கு அதிகாரம் வேண்டும் என்பதால் மாநில அந்தஸ்து கேட்பதாகச் சிலர் கிண்டல் செய்கிறார்கள். உண்மையில் புதுச்சேரி வளர்ச்சி அடைய வேண்டும்.. எதிர்காலத்தில் அரசியலுக்கு வருபவர்களுக்கு எந்தவொரு சிரமமும் இருக்கக்கூடாது. இதற்காக மட்டுமே நான் மாநில அந்தஸ்தைக் கேட்கிறேன்.

உச்ச நீதிமன்றம் உத்தரவுக்குப் பிறகு, நமக்கு மரியாதையே இல்லை என்ற நிலையே உருவாகியுள்ளது. அதிகாரம் இல்லாததால் தினமும் மன உளைச்சல்தான் ஏற்படுகிறது" என்று அவர் மனம் விட்டு பேசியிருக்கிறார். அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

முதல்வர் ரங்கசாமிக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மூலம் தொடர்ந்து பாஜக நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. அதன் அழுத்தம் தாங்காமலேயே இப்படி வெளிப்படையாக புலம்ப ஆரம்பித்திருக்கிறார் ரங்கசாமி. இது அங்கு நடைபெறும் கூட்டணி ஆட்சிக்கு ஆபத்தாக முடியலாம் என்கிற நிலையை உருவாக்கி இருக்கிறது.

x