நாமக்கல்: கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து, கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி மற்றும் புளியஞ்சோலைக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தற்காலிமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நாமக்கல் ஆட்சியர் ச.உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் நேற்று (19-ம் தேதி) முதல் நாளை (21-ம் தேதி) வரை 3 நாட்களுக்குக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே, நாமக்கல் வனக்கோட்ட கட்டுப்பாட்டில் உள்ள கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி மற்றும் மாசிலா அருவி, புளியஞ்சோலை ஆகிய இடங்களுக்குப் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் செல்ல தற்காலிக தடை விதிக்கப்படுகிறது.
எனவே, சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் யாரும் இச்சுற்றுலாத் தலங்களுக்கு வர வேண்டாம். இனிவரும் நாட்களில் பெய்யும் மழையைப் பொறுத்து பயணிகள் அனுமதி தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.