புதுச்சேரி, காரைக்காலில் இனி சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் இயங்கும்: அரசு உத்தரவு


புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்கால் பள்ளி மாணவர்களுக்கு விடப்பட்ட 11 நாள் வெப்ப அலை, மக்களவைத் தேர்தல் விடுமுறைகள் மற்றும் மொஹரம் விடுமுறை ஆகியவற்றை ஈடு செய்யும் வகையில் 12 சனிக்கிழமைகள் பள்ளிகள் இயங்கும் என்று கல்வித்துறை இன்று அறிவித்துள்ளது.

புதுச்சேரியில் அரசுப் பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் முழுமையாக அமலுக்கு வந்து உள்ளது. அதனால் இக்கல்வியாண்டு ஏப்ரலில் தொடங்கியது. ஆனால் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்ததால் விடுமுறை விடப்பட்டது. அதைத்தொடர்ந்து மக்களவைத் தேர்தல் காரணமாக விடுமுறை விடப்பட்டது. இதை ஈடு செய்ய சனிக்கிழமைகளில் வகுப்புகள் இயங்கவுள்ளது.

இது பற்றி கல்வித்துறை இணை இயக்குநர் சிவகாமி வெளியிட்ட அறிவிப்பில், புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் மக்களவைத் தேர்தல், வெப்ப அலை ஆகியவற்றின் காரணமாக விடுமுறை விடப்பட்ட நாட்களை ஈடு செய்ய 12 சனிக்கிழமைகள் இயங்கும். கடந்த ஏப்ரல் 17, 18, 29, 30 தேதிகள். ஜூன் 3, 4, 5, 6, 7, 10,11 தேதிகள். ஜூலை 17 ஆகிய நாட்களுக்கு பதிலாக வரும் ஜூலை 29, ஆகஸ்ட் 3, 10, 24, 31, செப்டம்பர் 21, 28, அக்டோபர் 5, 19, 26, நவம்பர் 9, 23 ஆகிய நாட்களில் பள்ளிகள் இயங்கும்" என இணை இயக்குநர் கூறியுள்ளார்.

x