மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி 19-ம் தேதி தொடர் முழக்க போராட்டம்: ராமதாஸ் அறிவிப்பு


சென்னை: மின்கட்டண உயர்வை கண்டித்தும், கட்டண உயர்வைதிரும்பப் பெற வலியுறுத்தியும் பாமக சார்பில் சென்னையில் 19-ம் தேதி தொடர் முழக்க போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரி வித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் வீடுகள், வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டணம் நடுத்தர மக்கள் அனுபவித்து வரும் துயரங்கள் குறித்து எந்த கவலையும் இல்லாமல் 2 ஆண்டுகளுக்குள் 3-வது முறையாகமின்சாரக் கட்டணத்தை திமுக அரசு உயர்த்தியிருப் பது கண்டிக்கத்தக்கது.

இதற்கு முன் 2 முறை மின் கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகு 2022-23-ம் ஆண்டில் மின்வாரியத்துக்கு குறைந்தது 14,000 கோடி லாபம் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், மின்வாரியத்தின் இழப்பு அந்த ஆண்டில் 10,000 கோடியாக அதிகரித் தது.

2023-ம் ஆண்டில் வணிக நிறுவனங்களுக்கான மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டதால், அந்த ஆண்டில் ரூ.35,000 கோடி கூடுதல் வருவாய் கிடைத்திருக்கக் கூடும். ஆனால், மின்சாரவாரியம் கடும் இழப்பை சந்தித்திருப்பதாக கூறப்படுகிறது. மின்வாரியத்தின் இழப்புக்கு அங்கு நிலவும்ஊழல்களும், நிர்வாகச் சீர்கேடுகளும்தான் காரணம்.

தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள மின்சாரக் கட்டணஉயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். மாதம் ஒருமுறை மின்சாரக் கட்டணம் செலுத்தும் முறையை அறிமுகம் செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 19-ம் தேதிகாலை 11 மணிக்கு சென்னையில் பாமக சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் நடை பெறும்.

இந்தப் போராட்டத்துக்கு கட்சியின் தலைவர் அன்புமணி தலைமை ஏற்பார். கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, பகுதி, நகர, பேரூர், வட்ட,கிளை நிர்வாகிகளும், இணை, சார்பு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், நுகர்வோர் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் இந்த தொடர் முழக்கப் போராட்டத்தில் பங்கேற் பர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

x