மக்களின் நலனுக்காக தொடர்ந்து போராடினாலும் ஆதரிக்க தயங்குகிறார்கள்: ராமதாஸ் ஆதங்கம்


பாமக நிறுவனர் ராமதாஸ்

விழுப்புரம்: தமிழக நலனுக்காக தொடர்ந்து போராடினாலும், பாமகவை ஆதரிக்க மக்கள் தயங்குகிறார்கள் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

பாமக 36-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, தைலாபுரம் தோட்டத்தின் முன் நேற்று காலைபாமக நிறுவனர் ராமதாஸ் கட்சிக் கொடியேற்றி, தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சமூக ஜனநாயகம் என்ற கொள்கையின் அடிப்படையில், தொடர்ந்து தமிழக மக்களின் நலனுக்காக பாடுபட்டு வந்தாலும், பாமகவை ஏற்க மக்கள் முன்வருவதில்லை. ஆனாலும், மக்களுக்காக நாங்கள் தொடர்ந்து போராடி வருகிறோம்.

மின் கட்டண உயர்வு குறித்துபாமக முன்பே எச்சரித்ததுபோலவே, கட்டண உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மக்களை தேர்தல் நேரத்தில் விலைகொடுத்து வாங்கி விடுகிறார்கள்.

மக்களுக்காக எத்தனை போராட்டங்களை நடத்தினாலும், தேர்தல்நேரத்தில் கோட்டைக்கு அனுப்பத் தவறி விடுகிறார்கள். ஆனாலும் பாமக தனது பணியைத் தொடரும். மக்கள் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து போராடும். இவ்வாறு பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

x