10 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 15 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழ்நாடு அரசு உத்தரவு


சென்னை: தமிழ்நாடு மாநில உள்துறை செயலர் அமுதா, சென்னை மாநகராட்சி ஆணையாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 15 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் நிர்வாக காரணங்களுக்காக ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழ்நாடு அரசு அப்போது இடமாற்றம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது 15 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மாநில முதன்மை செயலாளர் ஷிவ் தாஸ் மீனா வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த ராதாகிருஷ்ணன் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக பள்ளிக்கல்வித்துறை செயலாளராக பணியாற்றி வந்த குமரகுருபரன் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் உணவு மற்றும் பாதுகாப்பு நுகர்வோர் துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசின் உள்துறை செயலராக பதவி வகித்து வந்த அமுதா ஐஏஎஸ், பேரிடர் மீட்பு பணித் துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக சந்திரகலா புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா புதுக்கோட்டை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்ட ஆட்சியராக லட்சுமி பவ்யா தானேரு நியமிக்கப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப்பிற்கு பதிலாக பிரியங்கா மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ்க்கு பதிலாக ஆகாஷ் புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். அரியலூர் மாவட்ட ஆட்சியர் ஆணி மேரி ஸ்வர்ணாவிற்கு பதிலாக ரத்தினசாமி புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜுக்கு பதிலாக சிபி ஆதித்யா செந்தில் குமார் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதருக்கு பதிலாக அழகு மீனா புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கற்பகத்திற்கு பதிலாக கிரேஸ் லால்ரிண்டிகி பச்சாவ் நியமிக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரனுக்கு பதிலாக சிம்ரன்ஜீத் சிங் புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். இதே போல் தாம்பரம், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர்களும் புதிதாக மாற்றப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

x