ஹிஜாவு நிதி நிறுவன இயக்குநரின் ஜாமீன் மனு தள்ளுபடி


சென்னை: சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிய ஹிஜாவு நிதி நிறுவனம் அதிக வட்டி தருவதாகக் கூறி பொதுமக்களிடம் சுமார் ரூ. 4 ஆயிரத்து 620 கோடி அளவுக்கு முதலீடுகளைப் பெற்று மோசடி செய்தது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள இந்நிறுவனத்தின் இயக்குநரான சவுந்தரராஜன் தனக்கு ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி டி.வி.தமிழ்செல்வி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், சவுந்தரராஜன் கடந்த 500 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருப்பதாகவும், அவரது உடல்நலனைக் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும், எனக் கோரப்பட்டது.

ஆனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தரப்பில், மனுதாரருக்கு உடல்நலனில் பிரச்சினை என்றால் சிறை மருத்துவமனையிலேயே சிகிச்சை மேற்கொள்ளலாம். சவுந்தரராஜனின் மகன் இன்னும் தலைமறைவாக உள்ளதால் ஜாமீன் வழங்கக்கூடாது, என ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து ஜாமீன் வழங்க காவல்துறை தரப்பிலும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து சவுந்தரராஜனின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

x