தமிழகத்தில் 4.83 சதவீதம் மின்கட்டணம் உயர்வு - வெளியானது அறிவிப்பு!


சென்னை: தமிழகத்தில் 4.83 சதவீதம் மின்கட்டணத்தை உயர்த்தி தமிழ்நாடு மின்சார வாரிய ஒழுங்கு முறை ஆணையம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டுக்கான மின் கட்டணம், ஜூலை 1 முதல் 4.83 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. இதன்படி, வீட்டு பயன்பாட்டுக்கான மின்கட்டணமானது 0 யூனிட் முதல் 400 யூனிட் வரை ரூ.4.60 லிருந்து ரூ.4.80 ஆக உயர்ந்துள்ளது. 401 முதல் 500 யூனிட் வரை ரூ. 6.15 லிருந்து ரூ.6.45 ஆக மின்கட்டணம் உயர்ந்துள்ளது. 501 முதல் 600 யூனிட் வரை ரூ.8.15லிருந்து ரூ.8.55 ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல 601 யூனிட் முதல் 800 யூனிட் வரை மின்கட்டணம் ரூ.9.20 லிருந்து ரூ.9.65 ஆக உயர்ந்துள்ளது.
801 முதல் 1000 யூனிட் வரை ரூ.10.20 லிருந்து ரூ.10.70 ஆக மின்கட்டணம் உயர்ந்துள்ளது. 1000 யூனிட்டிற்கு மேல் ரூ.11.25 லிருந்து ரூ.11.80 ஆக மின்கட்டணம் உயர்ந்துள்ளது. அதே சமயத்தில் வணிக பயன்பாடு மின் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த 2022 செப்டம்பர் மாதம் மின் கட்டணம் 30 சதவீதத்திற்கு மேல் உயர்த்தப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த 2023 ஜூலை மாதம் 2.18 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

x