பாஜக மகளிரணியின் தேசிய தலைவரும் தமிழக பாஜக எம்எல்ஏ-வுமான வானதி சீனிவாசன் ‘வாய்ஸ் ஆஃப் வானதி’ என்ற யூடியூப் சேனலை இன்று விஜயதசமி நாளில் வெற்றிகரமாகத் தொடங்கி இருக்கிறார். அரசியல் மீது ஆர்வமுள்ள் பெண் தலைவர்களை உருவாக்குவதும் அரசியல் குறித்து பெண்களுக்கு இருக்கும் அச்சத்தைப் போக்குவதும் தான் இந்தச் சேனலின் முக்கிய நோக்கமாம். எனினும், பாஜக அரசின் திட்டங்களையும் பாஜகவின் செயல்திட்டங்களையும் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் பிரச்சார களமாகவும் இந்தச் சேனலை பயன்படுத்தப் போகிறாராம் வானதி.