டி.என்.பி.எஸ்.சி குரூப்1 தேர்வு தொடங்கியது - விருதுநகரில் 6898 பேர் எழுதுகின்றனர்!


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் குரூப் 1 தேர்வு இன்று காலை தொடங்கியது. இதில் விருதுநகர் மாவட்டத்தில் 25 மையங்களில் 6,898 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

துணை ஆட்சியர் - 16, துணை காவல் கண்காணிப்பாளர் - 23, உதவி ஆணையர் வணிக வரி - 14, கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர்-21, உதவி இயக்குநர் (ஊரக வளர்ச்சி)- 14, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஒருவர் மற்றும் மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஒருவர் என மொத்தம் 90 காலி இடங்களுக்கான குரூப் 1 தேர்வு நடைபெறுகிறது.

1,25,726 ஆண்கள், 1,12,501 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 20 பேர் என மொத்தம் 2,38,247 பேர் இந்தத் தேர்வை எழுதுகின்றனர். இதற்காக 38 மாவட்டங்களில் 797 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் 25 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. 6,898 தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர். பொது அறிவில் 175 கேள்விகளும், மனத்திறனை சோதிக்கும் வகையில் 25 கேள்விகளும் என 200 கேள்விகள் இடம் பெறும். இதற்கு 300 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

x