வேளாண் கடன், கல்விக் கடன்களை ரத்து செய்யக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!


விவசாயிகளின் வேளாண் கடன் மற்றும் கல்விக் கடனை ரத்து செய்யக் கோரி கும்பகோணத்தில் பாரத ஸ்டேட் வங்கிக் கிளை முன்பு தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தினர் தேசியக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் துணைச் செயலாளர் சுகுமாறன் தலைமை வகித்தார். பொருளாளர் ராமநாதன், நிர்வாகிகள் சின்னதுரை, சுவாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை விளக்கி செயலாளர் சுவாமிமலை சுந்தர.விமலநாதன் உரையாற்றினார். இதில், கடந்த 10 ஆண்டுகளாக ரூ.10 லட்சம் கோடிக்கு மேல் பெரு நிறுவனங்களுக்கு கடன் தள்ளுபடி செய்துள்ளது மத்திய அரசு.

அதுபோல விவசாயிகளின் வேளாண் கடன், கல்விக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி பிரதமர், நிதியமைச்சர் மற்றும் பெரு நிறுவனங்களின் தலைவர்களின் உருவப்படத்தையும், தேசிய கொடியையும் ஏந்தியபடி விவசாயிகள் கண்டன முழக்கமிட்டனர். தொடர்ந்து, இந்தக் கோரிக்கையை பிரதமர் மோடிக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்தனர்.

x