ராகுல் வரும் முன் மேடைக்கு முதல் ஆளாக வந்த ஜெய்ராம் ரமேஷ்: காரணம் தெரியுமா?


முதல் ஆளாக மேடைக்கு வந்த ஜெய்ராம் ரமேஷ்

கன்னியாகுமரியில் இருந்து ‘இந்திய ஒற்றுமை பயணத்தை’ இன்று பொதுக்கூட்டத்துடன் தொடங்குகிறார் ராகுல் காந்தி. இந்தப் பயணத்திற்காக கன்னியாகுமரிக்கு சற்றுமுன் வந்தார் ராகுல் காந்தி. இப்போது ராகுல் காந்தி விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலையை பார்வையிடச் சென்றுள்ளார். இந்நிலையில் கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டிருக்கும் பொதுக்கூட்ட மேடைக்கு முதல் நபராக வந்துள்ளார் ஜெய்ராம் ரமேஷ்.

முன்னாள் மத்திய அமைச்சரும், சிட்டிங் எம்.பியுமான ஜெய்ராம் ரமேஷ் நிகழ்ச்சி தொடங்குவதற்கு 45 நிமிடங்களுக்கும் முன்பே முதல் நபராக மேடைக்கு வந்துவிட்டார். ராகுலின் இந்திய ஒற்றுமைப் பயணத்தை மொத்தமாக வடிவமைத்துக்கொடுத்ததோடு, இந்தப் பயணத்தின் ஒருங்கிணைப்பாளராகவும் ஜெய்ராம் ரமேஷே நியமிக்கப்பட்டுள்ளார்.

அதனால் முதல் நபராகவே ஜெய்ராம் ரமேஷ் வந்திருந்து மேடையில் அமர்ந்தவாறு பொதுக்கூட்ட மேடைக்கு செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகளையும் தன் செல்போன் மூலமும், நேரில் பார்வையிட்டும் கேட்டு வருகிறார். மூன்று மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்கும் நிலையில் அவர்களின் பாதுகாப்பு, ராகுல் காந்தியின் பாதுகாப்பு ஆகிய விபரங்களையும் ஜெய்ராம் ரமேஷ் கேட்டுத் தெரிந்து வருகிறார்.

x