ராகுலுக்காக கன்னியாகுமரி வந்துள்ள 58 பிரத்யேக கண்டெய்னர்கள்: உள்ளே என்ன இருக்கிறது?


தயாராகும் ராகுல், முதல்வர் பங்கேற்கும் விழா மேடை

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ‘இந்திய ஒற்றுமை பயணம்’ என்னும் யாத்திரையை கன்னியாகுமரியில் இருந்து நாளை மாலை தொடங்குகிறார். கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பிருந்து தொடங்கும் யாத்திரையை முன்னிட்டு 58 கண்டெய்னர்கள் குமரிக்கு வந்துள்ளன.

அணிவகுத்து நிற்கும் 58 கண்டெய்னர்கள்

ராகுல் காந்தி வருகைக்காக கன்னியாகுமரிக்கு 58 கண்டெய்னர்கள் வந்துள்ளன. இந்த கண்டெய்னர்கள் ராகுல் காந்தியின் நடைபயணத்தின் போது இரவு தங்குதலுக்காக வந்துள்ளன. இந்த கண்டெய்னர்களில் தனித்தனியே படுக்கை, கழிப்பறை, குளியல் அறை ஆகியவசதிகளும் உள்ளன. இந்த கண்டெய்னர்கள் ராஜஸ்தானில் இருந்து ராகுல்காந்தியின் யாத்திரைக்காக பிரத்யேகமாக வந்துள்ளன

இந்த கண்டெய்னர்கள் நடைபயணத்தின் போது மாற்றுப்பாதையில் செல்லும். ராகுலும், அவருடன் நடப்பவர்களும் ஓய்வெடுக்கும்போது மட்டும் இந்த கண்டெய்னர்கள் அவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்து சேரும்மாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. ராகுல்காந்தியின் மொத்த பயணத்திலும் நூறுபேர் உடன் செல்கின்றனர். மற்றவர்கள் அந்த, அந்த மாநிலத்தில் மட்டும் உடன் வந்து செல்கின்றனர். அந்த நூறுபேரின் தங்கும் வசதிக்காகவே இந்த கண்டெய்னர்கள் வந்துள்ளன. கேரவனில் இருக்கும் அனைத்து வசதிகளும் இதில் உள்ளன.

இந்த கண்டெய்னரில் இரண்டு முழுக்க ராகுல்காந்திக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மற்ற கண்டெய்னர்களில் சிலவற்றில் இரு படுக்கைகளும், சிலவற்றில் அதிகபட்சமாக பன்னிரெண்டு படுக்கைகளும் உள்ளன. ராகுலின் நடைபயணத்திற்கென்றே இந்த கண்டெய்னர்கள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

x