மதுரையில் நிதி அமைச்சர் கார் மீது காலணி வீசிய வழக்கில் பாஜகவினர் 3 பேரின் முன்ஜாமீன் மனு மீது தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. பாஜகவினர் மன்னிப்பு கோர நீதிபதி உத்தரவிட்டார்.
மதுரை விமான நிலையத்தில் ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் காலணியை வீசினர். இந்த வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் மதுரை விளாங்குடி வேங்கைமாறன், மேல அனுப்பானடி மணிகண்டன், மானகிரி கோகுல் அஜித் ஆகியோர் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதி இளங்கோவன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதி, மனுதாரர்கள் நடந்த சம்பவத்துக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி மனு தாக்கல் செய்ய வேண்டும். தீர்ப்பு ஒத்திவைக்கப்படுகிறது என உத்தரவிட்டார்.