12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் இயக்கங்கள் ஆர்ப்பாட்டம்! 


தென்காசி: தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் தென்காசி மாவட்டத்தில் அனைத்து வட்டார கல்வி அலுவலகங்கள் அருகில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று மாநிலம் முழுவதும் உள்ள வட்டார கல்வி அலுவலகங்கள் அருகில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றக்கூடிய 90 சதவீத ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பை பறிக்கக்கூடிய மாநில முன்னுரிமையை ரத்து செய்ய வேண்டும், அரசாணை 243-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும், இயக்குநர்கள் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொண்ட 12 அம்ச கோரிக்கைகளை விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டும் eன்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு நகர தலைவர் கோமதி தலைமை வகித்தார். நகரச் செயலாளர் முருகேசன் வரவேற்று பேசினார். மாவட்டச் செயலாளர் மாரிமுத்து சிறப்புரையாற்றினார். வட்டாரச் செயலாளர் கணேசன் நன்றி கூறினார். மேலநீலிதநல்லூரில் நிர்வாகிகள் சாமியா, அலெக்ஸ் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலச் செயலாளர் ராஜ்குமார் கண்டன உரையாற்றினார்.

இதே போல் குருவிகுளத்தில் ஆறுமுகச்சாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலச் செயலாளர் ராஜேந்திரன், மணிபாரதி ஆகியோர் சிறப்புரையாற்றினர். தென்காசியில் ரவி தலைமையிலும், கீழப்பாவூரில் சாமுவேல் துரைராஜ் தலைமையிலும் ஆலங்குளத்தில் வட்டாரச் செயலாளர் பவுல் அந்தோணிராஜ் தலைமையிலும், செங்கோட்டையில் வட்டார தலைவர் ஐயப்பன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்

x