உதகை: நீலகிரி மாவட்டத்தில் இன்று பழங்குடியினர் வசிக்கும் கிராமங்களில் காவல்துறை சார்பில் குறைதீர்க்கும் முகாம்கள் நடந்தப்பட்டன.
நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சுந்தரவடிவேல், உத்தரவின் பேரில் எல்லையோர கிராமங்களில் உள்ள பழங்குடியின மக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டி காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து குறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டன.
மஞ்சூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிண்ணக்கொரை, காமராஜர்நகர், ஜே.ஜே நகர், மசினகுடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிரியூர், இந்திராகாலனி, கோத்தகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செம்மநாரை, தாலமுக்கு, மேல்கப்பு, கீழ்கப்பு கொலகம்பை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட யானைபள்ளம், பழனியப்பா எஸ்டேட், மூப்பர்காடு, நெடுகல்கொம்பை நியூஹோப் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாலவாடி, காமராஜர் நகர், குறிஞ்சி நகர் மற்றும் சேரம்பாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முருக்கம்பாடி, வட்டக்கெல்லி, அத்திச்சால் ஆகிய பழங்குடியினர் கிராமங்களில் முகாம்கள் நடத்தப்பட்டன.
முகாம்களில் அனைத்து துறையை சார்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டு பழங்குடியின மக்களின் குறைகளை கேட்டறிந்து, அவர்களிடமிருந்து மனுக்கள் பெற்றனர். மொத்தம் 365 பழங்குடியின மக்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் 122 மனுக்கள் பெறப்பட்டன.