கள்ளச்சாராய உயிரிழப்புகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்: பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்


சென்னை: தமிழகத்தில் நிகழ்ந்த கள்ளச்சாராய உயிரிழப்புகள் குறித்துசிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி சென்னையில் நடந்தபாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழக பாஜக மாநில செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு பாஜக மாநிலதலைவர் அண்ணாமலை தலைமைதாங்கினார். மத்திய விவசாயத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுஹான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், மேலிட இணை பொறுப்பாளர் பி.சுதாகர் ரெட்டி, தமிழக பாஜக அமைப்பு செயலாளர் கேசவ விநாயகன், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், மாநில துணைத் தலைவர்கள், மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் உள்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

செயற்குழு கூட்டத்தில் கள்ளச்சாராய மரணங்கள் குறித்து சிபிஐவிசாரணை வேண்டும். முல்லை பெரியாறில் புதிய அணை, மேகேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கேரள, கர்நாடக அரசுகளை கண்டிக்க தவறிய திமுக அரசுக்கு கண்டனம். ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், காவல் துறையினரின் கோரிக்கைகளை தமிழக அரசுநிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மக்களவைத் தேர்தலில் பாஜகவின் வாக்கு சதவீதம் தமிழகத்தில் அதிகரித்திருப்பதற்கு அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. வரும் 2026 சட்டப்பேரவைதேர்தலுக்காக அடுத்த 2 ஆண்டுகள்அனைவரும் கடுமையாக உழைக்கவேண்டும். தேர்தலில் பாஜக 2-வதுமற்றும் 3-வது இடம் வந்த பூத்களில் நுணுக்கமாக கவனித்து, அங்கு தனி கவனம் செலுத்த வேண்டும் எனறும் அறிவுறுத்தப்பட்டது.

கூட்டத்தில் மத்திய அமைச்சர்சிவராஜ் சிங் சவுஹான் பேசியதாவது: 2026-ம் ஆண்டு தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்கும்போது சட்டப்பேரவையில் செங்கோல் நிறுவப்படும். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக ஆட்சியின் குறைபாடுகளை மறைக்க மத்திய அரசை குறை கூறி வருகிறார். கடந்த10 ஆண்டுகளில் ரூ.2 லட்சத்து47 ஆயிரம் கோடி அளவுக்குதமிழகத்துக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலினுக்கு பின்னால், அவரது குடும்பத்தினர் ஆட்சி செய்கின்றனர். பிரதமர் மோடி ஜல் ஜீவன் திட்டம் மூலம் மக்களுக்கு தண்ணீர் வழங்குகிறார். ஆனால் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் மதுவைத்தான் வழங்குகிறார். திமுக ஆட்சியில்தான் தமிழகம் சீரழிந்து வருகிறது. தமிழகத்தில் 2026-ல் பாஜகவின் வெற்றி வாய்ப்பை யாராலும் தடுக்கமுடியாது. இவ்வாறு பேசினார்.

தொடர்ந்து, அண்ணாமலை பேசியதாவது: மக்களவைத் தேர்தலுக்கு பணியாற்றியதுபோல, அடுத்த 2 ஆண்டுகள் பாஜகவினர் கடுமையாக வேலை செய்ய வேண்டும். 2026-ம் ஆண்டு விவசாயிகள், ஏழை எளிய மக்களுக்கான ஆட்சியை கொடுக்க வேண்டிய பொறுப்பு பாஜகவுக்கு இருக்கிறது.

அடுத்த ஒரு மாத காலத்துக்கு சட்டப்பேரவை வாரியாக பாஜகநன்றி அறிவிப்புக் கூட்டம் நடத்தஉள்ளது. பாஜகவினர் ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கு 100 தெருமுனை பிரச்சார கூட்டங்களை நடத்த வேண்டும். அந்த கூட்டத்தில் கலாச்சாரம், சட்டம் ஒழுங்கு, நீட் குறித்து பாஜகவினர் பேச வேண்டும். தமிழகத்தில் எப்போது வேண்டுமானாலும் உள்ளாட்சி தேர்தல் நடக்கலாம்.

அந்த தேர்தலில் தமிழகத்தில் 25 ஆயிரம் இடங்களில் பாஜகவினர் வேட்பாளர்களாக நிற்க வேண்டும். மக்களவைத் தேர்தலில் 7 ஆயிரம் பூத்களில் பாஜகமுதலிடம் வந்துள்ளது. அவர்கள்அனைவரையும் கவுரவிக்க வேண்டும். அடுத்த 2 ஆண்டுகளில் பாஜகவில் இன்னும் நிறைய தலைவர்கள் இணைய இருக்கிறார்கள். எனவே, பாஜகவினர் இன்னும் கடுமையாக உழைத்தால், 2026-ல்பாஜக ஆட்சிக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது.

இளைஞர்கள் பூத், மண்டல அளவில் பொறுப்புகளை கேளுங்கள். மாநில பொறுப்புகளை கேட்காதீர்கள். 66 பாஜக மாவட்ட தலைவர்களில் 11 மாவட்ட தலைவர்கள்சொந்த பூத்களில் வெற்றி பெற்றுள்ளனர். எனவே, பாஜகவினர் தங்களை சுயபரிசோதனை செய்யுங்கள். இவ்வாறு பேசினார்.

x