விக்கிரவாண்டி தேர்தலை பொறுத்தவரை அதிமுக, பாமகவின் நோக்கம் ஒன்றுதான்: ராமதாஸ்


விழுப்புரம்: பாமக நிறுவனர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

விக்கிரவாண்டி தேர்தலில் பாமக பிரச்சாரக் கூட்டங்களுக்கு வரும் பெண்களைத் தடுப்பது, உள்ளாட்சிப் பிரதிநிதிகளை மிரட்டுவது போன்ற செயல்களில் திமுக அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த அத்துமீறல்களை முறியடித்து, பாமக வேட்பாளர் 40ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். இந்த தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்தால்கூட, திமுக தோல்வி உறுதி.

விக்கிரவாண்டி தேர்தலைப் பொறுத்தவரைஅதிமுக, பாமகவின் நோக்கம் ஒன்றுதான். எனவே,பாமக வேட்பாளருக்கு அதிமுகவினர் வாக்களிக்க வேண்டும்.திருவெண்ணெய்நல்லூரில் கள்ளச் சாராயம் குடித்து ஒருவர் இறந்துள்ளார். கள்ளச் சாராய விற்பனையை தடுக்க தமிழக அரசு தவறி விட்டது.

திமுக சமூக நீதிக்கு செய்த நன்மைகளைவிட, தீமைகளே அதிகம். இடைத்தேர்தலுக்கு பின்னர் மின் கட்டண உயர்வை அறிவிக்க உள்ளதாகத் தெரிகிறது. இந்த இடைத்தேர்தலில் திமுக தோல்வி அடைந்தால், மின் கட்டணஉயர்வை அரசு கைவிடும்.

நீட் தேர்வை திணித்தது திமுகவும், காங்கிரஸும்தான். நீட் தேர்வை அறிமுகம் செய்த திமுக,தற்போது அதற்கு எதிராக உள்ளதுபோல காட்டிக்கொள்கிறது. காமராஜர் பல்கலை.யில் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கக்கூட நிதிஇல்லை. எனவே, தமிழக அரசுஇந்தப் பல்கலை.க்கு ரூ.500 கோடிகடனுதவி வழங்க வேண்டும்.

இவ்வாறு ராமதாஸ் கூறினார்

x