புறப்பட தயாரான ஸ்பைஸ் ஜெட் விமானம்... திடீர் கோளாறால் தப்பிய 161 பயணிகள்: மதுரை ஏர்போர்ட்டில் நடந்தது என்ன?


தாமதமான விமானம்

மதுரையிலிருந்து துபாய் செல்லும் ஸ்பைஸ் ஜெட் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுமார் 6 மணிநேர தாமதத்திற்கு பிறகு மாலை 6.45 மணிக்கு விமானம் துபாய் புறப்பட்டது.

மதுரையில் இருந்து துபாய் செல்லும் ஸ்பைஸ்ஜெட் விமானம் இன்று பகல் 12 மணியளவில் புறப்பட வேண்டும். ஆனால், திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால், விமானம் 161 பயணிகளுடன் புறப்பட தயாராக இருந்த நிலையில், விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டு விமானத்தில் ஏற்றப்பட்ட பயணிகள் மீண்டும் விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு மதியம் உணவு வழங்கப்பட்டது.

ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவன பொறியாளர்கள் விமானத்தில் உள்ள கோளாறுகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். விமானம் புறப்பட தயாராகும் வரை பயணிகள், விமான நிலைய வளாகத்திற்குள் தங்கவைக்கப்பட்டனர். தொடர்ந்து, சுமார் 6 மணி நேரம் தாமதத்திற்கு பிறகு விமானம் சரிசெய்யப்பட்டு, பயணிகள் மீண்டும் விமானத்தில் ஏற்றப்பட்டு மாலை 6.45 மணிக்கு துபாய் புறப்பட்டது. 6 மணி நேரமாக விமானம் புறப்பட தாமதமானதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர்.

x