ஓவேலி ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட யானை கரையேறிய வீடியோ வைரல்


நீலகிரி மாட்டம் கூடலூரில் ஓவேலி ஆற்றைக் கடக்க முயன்ற யானைகள். (அடுத்த படம்) ஆற்று வெள்ளத்தில் சிக்கிய யானை.

கூடலூர்: நீலகிரி மாவட்டத்தில் ஓவேலிஆற்றை கடக்க முயன்ற யானை நீரில் அடித்து செல்லப்பட்ட காட்சி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நீலகிரி மாவட்டம் கூடலூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்துகனமழை பெய்து வருகிறது.

இதனால், ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட தர்மகிரி வனப் பகுதியில் உள்ள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாறைகள் நிறைந்த இந்த ஆற்றை மூன்று யானைகள் கடக்க முயற்சி செய்தன.

அப்போது முதலில் சென்ற பெண் யானை ஆற்று வெள்ளத்தில் சுமார் 300 மீட்டர் தொலைவுக்கு அடித்துச் செல்லப்பட்டது. எனினும், பாறைகள் அதிகமாக இருந்ததால், அந்த யானைவெள்ளத்திலிருந்து லாவகமாக தப்பி, கரையை அடைந்தது.

சமூக வலைதளங்களில்... வெள்ளநீரில் யானை அடித்துச் செல்லப்படுவதைக் கண்டஇளைஞர்கள், அதை வீடியோ எடுத்தனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து, அப்பகுதியில் வனத் துறையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.