சிதம்பரம் ஜமாபந்தியில் வேளாண் துறை கண்காட்சி


இதற்கான ஏற்பாடுகளை  வட்டார வேளாண் தொழில் நுட்பக் குழு மேலாளர்கள் ஆனந்த செல்வி கல்பனா மற்றும் உதவி தொழில் நுட்ப அலுவலர்கள் செய்திருந்தனர்.

கடலூர்: சிதம்பரம் ஜமாபந்தியில் வேளாண் துறை திட்டங்கள் குறித்து கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. விவசாயிகள், பொதுமக்கள் இதை பார்வையிட்டு சென்றனர்.

சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று (ஜூன்26) ஜமாபந்தி நிறைவு நாள் நடைபெற்றது. இதில் கீரப்பாளையம், குமராட்சி மற்றும் பரங்கிப்பேட்டை வட்டார வேளாண் துறை சார்பில் கண்காட்சி அரங்கு அமைக்கப்பட்டு இந்தது.

இந்த கண்காட்சி அரங்கில் முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், உழவன் செயலியின் பயன்கள் மற்றும் செயல்பாடுகள், மண் மற்றும் பாசன நீர் மாதிரி பரிசோதனையின் அவசியம், திரவ உயிர் உரங்களின் வகைகள், உபயோகிக்கும் முறை மற்றும் பயன்கள், பயிருக்கு தேவையான நுண்ணூட்டக் கலவை மற்றும் இதர தொழில் நுட்பங்கள் அடங்கிய கண்காட்சி அரங்கு அமைக்கப்பட்டது.

இக்கண்காட்சியினை சிதம்பரம் சார்- ஆட்சியர் ரஷ்மி ராணி துவக்கி வைத்து பார்வையிட்டு தொழில் நுட்பங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை விவசாயிகளுக்கு வழங்கினார். கீரப்பாளையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அமிர்தராஜ், சிதம்பரம் வட்டாட்சியர் ஹேமா ஆனந்தி, வேளாண்மை அலுவலர்கள் சிவப்பிரியன்,செல்வி. சிந்துஜா, துணை வேளாண்மை அலுவலர் சிவசங்கர், துணை வட்டாட்சியர் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.