முதுமலை: முதுமலையில் கால்வாயில் விழுந்த குட்டி யானையை வனத்துறையினர் மீட்டு தாயிடம் சேர்த்தனர்.
நீலகிரி மாவட்டம், முதுமலை கார்குடி வனச்சரகர் விஜய் தலைமையிலான வனத் துறையினர் ஒம்பட்டா வேட்டை தடுப்பு காவலர்கள் தினசரி ரோந்து மேற்கொண்டு வருகின்றனர். நேற்று ஒம்பட்டா வேட்டை தடுப்பு முகாம் பகுதிக்கு அருகில் ரோந்து சென்றபோது பிறந்து சில நாட்களே ஆன குட்டி யானை ஒன்று கால் வாயில் விழுந்து கிடப்பதை கண்டனர்.
மேலும், அதன் அருகில் தாய் யானை நின்று கொண்டிருந்தது. தகவலின் பேரில் துணை இயக்குனர் வித்யா அறிவுரையின் பேரில் வனப் பணியாளர்கள் கால்வாயில் இறங்கி இருந்தால் குட்டி அன்பு அனைவரும் சேர்ந்து கால்வாயில் இருந்து மேலே தூக்கி விட்டனர்.
பின்னர் குட்டியை மீட்டு தாயுடன் சேர்த்தனர். தாயுடன் குட்டி யானை நலமாக உள்ளது. மேலும் வனப் பணியாளர்கள் தாய் யானையையும், குட்டி யானையையும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என வனச்சரகர் விஜய் தெரிவித்துள்ளார்.