ஜி-23 தலைவர்களை சமாதானப்படுத்த சோனியா முயற்சி?


நடந்து முடிந்த உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களில் நான்கில் பாஜக வெற்றி பெற்றது. காங்கிரஸ் வசமிருந்த பஞ்சாப்பை ஆம் ஆத்மி கைப்பற்றியுள்ளது. இந்த தோல்வியால் காங்கிரஸ் தலைமைக்கும், ஜி-23 என்று அழைக்கப்படும் காங்கிரஸ் மூத்த தலைவர்களுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கூடிய காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில், இடைக்காலத் தலைவராக சோனியாகாந்தி நியமிக்கப்பட்டார். இதற்கு ஜி-23 தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் தனியாக கூடி கூட்டங்களையும் நடத்தினர். "காங்கிரஸ் கட்சியில் எல்லோருக்கும் வாய்ப்பு அளிக்கக்கூடிய, ஒருங்கிணைந்த தலைமை வேண்டும்" என்று ஊடகங்கள் வழியே அவர்கள் கட்சி தலைமைக்கு வேண்டுகோளும் விடுத்தனர். சோனியா காந்தி இடைக்காலத்தலைவராக நியமிக்கப்பட்டதை ஜி-23 தலைவர்கள் எதிர்த்தாலும், சோனியா குடும்பத்தை நாங்கள் எதிர்க்கவில்லை என்றும் கூறியுள்ளனர். அதாவது சோனியாவை எதிர்ப்பதுபோல், ராகுல்காந்தியை நாங்கள் எதிர்க்கவில்லை என்று சொல்லாமல் சொல்லியுள்ளனர். எனவே, நாளை நடக்கும் கூட்டத்தில் ஜி-23 தலைவர்களை சமாதானப்படுத்த அப்படியான நடவடிக்கையை சோனியா காந்தி எடுப்பார் என்று கட்சி வட்டாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு இறுதியில் இமாச்சலப் பிரதேசம், குஜராத் மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதில் காங்கிரஸ் வெற்றி பெறுவதற்கான வியூகம் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

x