திடீரென விழுந்த மேற்கூரைகள், ஓடுகள்: பீதியில் மக்கள்


ஒட்டன்சத்திரம் அருகே கொ.கீரனூரில் இன்று காலை பல வீடுகளில் மேற்கூரைகள், ஓடுகள் சிதறி விழுந்தன. இதனால் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே கீரனூர் கிராமம் உள்ளது. இங்கு இன்று அதிகாலை 2 மணி முதல் தொடர்ந்து 10 நிமிடத்திற்கு ஒரு முறை வெடிச்சத்தம் போல சத்தம் கேட்டுக் கொண்டேயிருந்தது. இதனால் பீதியடைந்த மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். இந்நிலையில், பெருமாள்கவுண்டன்வலசு என்ற பகுதியைச் சேர்ந்த முருகன் வீட்டில் விரிசல் ஏற்பட்டது. அத்துடன் பல வீடுகளில் மேற்கூரை, ஓடுகள் சிதறி விழுந்தன. சில வீடுகளின் சுற்றுச்சுவர்களும் இடிந்தன. தகவலறிந்த பழனி கோட்டாட்சியர் சிவக்குமார், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் முத்துச்சாமி, ஊராட்சிமன்ற தலைவர் விஜயலட்சுமி சண்முகசுந்தரம் மற்றும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். நில அதிர்வு ஏற்பட்டதா என்று அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.

x