எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன் நடந்த விருந்து


லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டின் முன்பு குவிந்த அதிமுகவினருக்கு காலையில் டீ, காபியும், மதியம் தக்காளி சாதமும் வழங்கப்பட்டது.

கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டின் முன்பு அவரது ஆதரவாளர்கள் திரண்டு வருகின்றனர். மேலும் முன்னாள் எம்எல்ஏக்கள், அதிமுகவினரும் அதிகளவில் திரண்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டிற்கு வந்த வால்பாறை எம்எம்ஏ அமுல் கந்தசாமி தன்னை வீட்டிற்குள் அனுமதிக்கக் கோரி காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக அதிமுகவினரும் முழக்கம் எழுப்பினர்.

கடந்த முறை சோதனை நடந்தபோது, வீட்டின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. காலையில் இட்லி, பொங்கல், டீ, காபி, வாட்டர் பாட்டில், குளிர்பானம் போன்றவை வழங்கப்பட்டது. அதன்பின் முற்பகலில் ரோஸ் மில்க்கும், மதியம் தக்காளி சாதமும் வழங்கப்பட்டது. அதேபோல் தற்போதும் இதேபோல் எஸ்பி வேலுமணி வீட்டு முன் குவிந்தவர்களுக்கு முதற்கட்டமாக டீ, காபி, பன், பிஸ்கட் போன்றவை வழங்கப்பட்டது. மேலும், மதிய உணவுக்கு தக்காளி சாதம் விநியோகிக்கப்பட்டது.

x