சென்னையில் தொழிலதிபர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை


சென்னை ஆலந்தூரில் உள்ள தாது மணல், நிறுவனமான டி.ஜே மினரல்ஸ் என்ற நிறுவனத்தில் காலை முதல் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.

தாதுமணல் தவிர குவாரி மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலிலும் இந்த நிறுவனம் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதேபோல் சென்னை புரசைவாக்கம் சுப்பையா வடக்கு தெருவில் வசித்து வருபவர் சுரேஷ் லால்வானி என்பவர் வீட்டிலும் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

லால்வானி இருசக்கரம், நான்கு சக்கர வாகனங்களுக்கு பைனான்ஸ் வழங்குவது மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் நபர்களுக்கு கடனுதவி வழங்குவது உள்ளிட்ட தொழில் செய்து வருகிறார். தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவதால் சோதனை முடிவில் மற்ற தகவல்கள் தெரியவரும் என வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

x