திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியை இன்று தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு நேரில் சந்தித்தார். திராவிடர் கழகத்தின் தலைமை நிலையமான பெரியார் திடலில் நடந்த இந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரத்துக்கும் மேல் நீடித்தது.
அறநிலையத்துறையின் பணிகள் குறித்து இருவரும் விவாதித்துக்கொண்டதாக சமூக வலைத்தளங்களில் விதவிதமான கற்பனைச் செய்திகள் உலா வருகின்றன.
இதுகுறித்து அறிவதற்காக திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசுவிடம் கேட்டபோது, நாளை தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் பிறந்த நாள். எனவே, பெரியார் திடலுக்கு வருகைதந்து, தந்தை பெரியாரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தவிருக்கிறார். அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்வதற்காகவே அமைச்சர் சேகர் பாபு பெரியார் திடலுக்கு வருகைதந்தார். மற்ற செய்திகள் எல்லாம் கற்பனையானவையே என்றார்.