முதல்வர் பாதுகாப்பு பிரிவில் முதன் முறையாக பெண் காவலர் நியமனம்


தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் பாதுகாப்பு பிரிவில் முதல்முறையாக பெண் காவலர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக வரலாற்றில் இதுவரை முதல்வரின் பாதுகாப்பு பிரிவில் பெண் காவலர்கள் சேர்க்கப்படவில்லை. ஏன்? மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பாதுகாப்பு பிரிவில் சேர்க்கப்படவில்லை. ஆனால், பெண் கமாண்டோக்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், முதன் முறையாக முதல்வரின் பாதுகாப்பு பிரிவில் பெண் காவலர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

250-க்கும் மேற்பட்ட ஆண் காவலர்கள் சுழற்சி முறையில் முதல்வரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது அதில் பெண் தலைமைக் காவலர் ஒருவர் சேர்க்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, முதல்வரின் பாதுகாப்பு பிரிவில் பெண் தலைமைக் காவலர் ஒருவர் சேர்க்கப்பட்ட நிலையில், மேலும் சில பெண் காவலர்களை சேர்க்க பயிற்சிகள் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளன.

x