தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார் உள்பட ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார், சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார். ராமஜெயம் கொலை வழக்கை ஜெயக்குமார் தலைமையில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதனால், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பாலாஜி சரவணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் மற்றும் ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்திற்கு போக்குவரத்து மற்றும் தலைமை பொறுப்புககான கூடுதல் ஆணையர்களை தமிழக அரசு நியமித்துள்ளது. அதன்படி, சென்னை குற்றப்பிரிவு ஐஜி காமினி, தாம்பரம் காவல் ஆணையரக கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அமலாக்கத்துறை ஐஜி விஜயகுமாரி, ஆவடி காவல் ஆணையரக கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.