உக்ரைனில் உள்ள தமிழர்களுக்கு உதவ முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக திமுக எம்பி அப்துல்லா தெரிவித்தார்.
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனில் உள்ள வான் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. பல நாடுகளை சேர்ந்தவர்கள் உக்ரைனில் இருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில், உக்ரைனின் உள்ள தமிழர்களை மீட்க அயலக தமிழர் நலன் மற்றும் நல்வாழ்வுத்துறை ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
உக்ரைனின் உள்ள தமிழர்கள் 044-28515288, 9600023645, 9940256444 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், www.nrtamils.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக உதவி கோரலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே, உக்ரைனில் உள்ள தமிழர்களுக்கு உதவ முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக திமுக எம்பி அப்துல்லா தெரிவித்தார்.