மதுரை மாநகராட்சி தேர்தலில் 99 வார்டுகளில் போட்டியிட்டு ஒரு இடத்தில் வெற்றிப் பெற்ற, பாஜக 88 வார்டுகளில் டெபாசிட் இழந்துள்ளது.
மதுரை மாநகராட்சி தேர்தலில் மொத்தமுள்ள நூறு வார்டுகளில் பாஜக வேட்பாளர்களை நிறுத்தியது. 84வது வார்டின் பாஜக வேட்பாளர் அதிமுகவில் சேர்ந்ததால், 99 வார்டுகளில் பாஜக போட்டியிட்டது. இதில் 86-வது வார்டில் பாஜக வேட்பாளர் பூமா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளரைவிட 75 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிப்பெற்றார்.
பாஜகவுக்கு 10 வார்டுகளில் மட்டுமே டெபாசிட் கிடைத்தது. 88 வார்டுகளில் பாஜக வேட்பாளர்கள் டெபாசிட்டை பறிகொடுத்தனர். 11 வார்டுகளில் 2ம் இடமும், 51 வார்டுகளில் 3-ம் இடமும், ஒரு வார்டில் 4-வது இடமும் பாஜகவுக்கு கிடைத்தது. 18 வார்டுகளில் 500-க்கும் குறைவாக பாஜகவுக்கு ஓட்டு கிடைத்துள்ளது. மதுரை மாநகராட்சியில் நாம் தமிழர் கட்சி 5 வார்டுகளிலும், மக்கள் நீதி மய்யம் 4 வார்டுகளிலும், அமமுக 2 வார்டுகளிலும், தேமுதிக ஒரு வார்டிலும் 3-ம் இடத்தை பிடித்துள்ளது.