சீமானின் சொந்த மாவட்டத்திலேயே சொதப்பிய நாம் தமிழர்!


சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் சொந்த ஊர், சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள அரனையூர் கிராமம். எனவே, சிவகங்கை மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஏதாவது வெற்றியை பதிவுசெய்திருக்கிறதா? என்பதே அரசியல் ஆர்வலர்கள் பலரின் தேடுதலாக இருக்கிறது. இப்படித் தேடுபவர்களுக்கு அதிர்ச்சிகரமான முடிவுகள் கிடைக்கின்றன.

சிவகங்கை நகராட்சியில், மொத்தமுள்ள 27 வார்டுகளில் 11 வார்டுகளில் நாம் தமிழர் கட்சி போட்டியிட்டுள்ளது. இதில் 1-வது வார்டில் 6 ஓட்டுகளை மட்டுமே பெற்றுள்ள அக்கட்சி, 2-வது வார்டில் 18, 5-வது வார்டில் 5, 7-வது வார்டில் 5, 13-வது வார்டில் 14, 14-வது வார்டில் 15, 17-வது வார்டில் 4, 22-வது வார்டில் 23, 23-வது வார்டில் 8, 26-வது வார்டில் 9, 27-வது வார்டில் 15 ஓட்டுகள்.

ஆக மொத்தம், 11 வார்டுகளிலும் சேர்த்தே நாம் தமிழர் கட்சி 120 ஓட்டுகள்தான் வாங்கியிருக்கிறது. சராசரியாக வார்டுக்கு 12 ஓட்டுகளையே அக்கட்சியால் பெற முடிந்திருக்கிறது. இந்த நகராட்சியில் திமுக 11, அதிமுக 5, காங்கிரஸ் 3, சுயேச்சைகள் 8 இடங்களில் வெற்றிபெற்றிருக்கிறார்கள்.

சிவகங்கை நகராட்சி மட்டுமல்ல 3 நகராட்சியும், 12 பேரூராட்சிகளும் உள்ள சிவகங்கை மாவட்டத்தில், ஓரிடத்தில்கூட நாம் தமிழர் கட்சி வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

x