ஸ்டாலின் சுயசரிதை நூல் வெளியிட்டு விழா- பினராயி விஜயனுக்கு திமுக நேரில் அழைப்பு


கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் திமுக எம்பி டி.கே.எஸ்.இளங்கோவன் சந்திப்பு

திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் எழுதிய `உங்களில் ஒருவன்' நூல் வெளியிட்டு விழாவில் பங்கேற்க வரும்படி கேரள முதல்வர் பினராயி விஜயனை இன்று நேரில் சந்தித்து திமுக எம்பி டி.கே.எஸ்.இளங்கோவன் அழைப்பிதழ் கொடுத்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய `உங்களில் ஒருவன்' நூல் வெளியிட்டு விழா வரும் 28ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்கும்படி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்களுக்கு திமுக நேரில் அழைப்பு விடுத்து வருகிறது. காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி பங்கேற்பார் என்று தெரிகிறது. இதேபோல் திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி பங்கேற்பாராக அல்லது அவர் சார்பில் கட்சியின் மூத்த தலைவர் பங்கேற்பாரா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. பாஜக, அதன் கூட்டணி கட்சிகள் அல்லாத கட்சித் தலைவர்களுக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. இது 2024ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் திமுக ஈடுபட்டு வருவதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், தி.மு.க. செய்தித் தொடர்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.எஸ்.இளங்கோவன், கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனை இன்று நேரில் சந்தித்து, திமுக தலைவர் ஸ்டாலின் எழுதியுள்ள தன் வரலாற்று நூலான 'உங்களில் ஒருவன் பாகம்-1' புத்தக வெளியீட்டு விழாவுக்கான அழைப்பிதழை வழங்கினார்.

x